கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்  அரசு மதுபான கடையை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம்!
வாணியம்பாடி, அக்.12-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வரும் வருகிறது, மதுபான கடைக்கு வரும் குடிமகன்கள், மதுபானங் களை குடித்துவிட்டு காலி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விவசாயநிலத்தில் வீசிச்செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும்,  மேலும் அவ்வழியாக செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் குடிமகன்களால் மிகுந்த அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் இதுவரையில் அரசு மதுபான கடையை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தை புறக்கணித்து அரசு மதுபான கடையை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் வட்டாட்சியர் ரேவதி ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.மேலும் இது குறித்து துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக  உறுதியளித்தின் பேரில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad