மேலும் தீப்பெட்டி தொழிலின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,
உலகத்துல தீக்குச்சி உருவாகி 167 வருடம் ஆகிவிட்டது, அது தீப்பெட்டி ஆக்கப்பட்டு 126 வருடம் ஆகிறது, அதுல இந்தியாவுக்கு தீப்பெட்டி வந்து 1910 ஆம் ஆண்டு முழு இயந்திரத்தால் தீப்பெட்டி வந்தது, அதை சிவகாசியில் இருந்து ரெண்டு பேர் சென்று அந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் கற்றுக் கொண்டு சிவகாசியில் வந்து 1923 ஆம் ஆண்டு கையால் செய்யக்கூடிய தீப்பெட்டி ஆரம்பித்தார்கள்.
அதனுடைய நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்த எங்கள் சங்கம் தீர்மானித்தது, ஒன்று மத்திய மாநில அரசுகள் வந்து எங்களுக்கு நிறைய சமயங்களில் உறுதுணையாக இருந்துள்ளார்கள். அதனால் தொழில் வந்து நூற்றாண்டையும் கடந்து கந்தக பூமியில் நிலைபெற்றிருக்கு என்றார்.
இந்தியாவுக்கு தேவையான 90% தீப்பெட்டி தமிழகத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. உலகத்துக்கு தேவையான தீப்பெட்டிகளில் 45 சதவீதம் இந்தியாவிலிருந்து தயாரித்து வழங்கி கொண்டு இருப்பதாக தெரிவித்தார். வருஷத்திற்கு 800 கோடி ரூபாய் உள்நாட்டு வணிகமும் 600 கோடி வெளி நாட்டு வணிகமும் அன்னிய செலவாணியாக ஈட்டி தந்து கொண்டிருப்பதாக கூறினார்.
மேலும் இந்த தொழில் நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மத்திய அரசை பொருத்தவரையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு, வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சைனா சிகரெட் லைட்டருக்கு தடை பெற்று தந்தார்கள். அதற்கு நன்றி செலுத்துகின்ற வகையில் கடந்த மாதம் மத்திய நிதி அமைச்சர் அழைத்து ஒரு விழா நடத்தினோம், அதே மாதிரி மாநில அரசு பொறுத்த வரையில நிறைய உதவிகள் எங்களுக்கு செய்திருக்காங்க தீப்பெட்டிக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைட் ஒவ்வொரு ஆண்டும் வந்து நாங்க அதை புதுப்பிக்கணும் அது எங்களுக்கு ரொம்ப சிரமங்களை தந்தது ஆறு மாசத்துக்கு கூட சமயத்துல தாமதம் ஆயிடும் இதெல்லாம் வந்து மாண்புமிகு அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் சொன்னோம், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்ற வரைமுறை செய்துள்ளனர். அதேபோல 2000 ஆண்டு வெளிநாட்டிலிருந்து சைனாவில் இருந்து தீப்பெட்டிகள் வரக்கூடிய சூழ்நிலை இருந்தது அதையும் மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரிடம் முறையிட்டோம், சைனால இருந்து மட்டுமில்லாமல் எந்த நாட்டில் இருந்தும் தீப்பெட்டிகள் வந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய முடியாத தடை பெற்று தந்தார்கள். அது போல இன்றைய முதல்வர் எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார்கள். வெளிநாட்டு சிகரெட் லைட்டருக்கு தடை விதிப்பதற்கு பரிந்துரை செஞ்சாங்க, அது மாதிரி தீக்குச்சிகள் வரி வந்து வித்தியாசம் இருந்தது அதையும் மாற்றி கொடுத்துள்ளார்கள்.
ஆறு தீப்பெட்டி கிளஸ்டர்கள் தமிழ்நாட்டில் அமைத்து தந்துள்ளார்கள். அது மாதிரி ஒரு காமன் ஸ்பெஷலிஸ்ட் சென்டர் 50 லட்சம் செலவில் உள்ள காமனா பயன்படுத்திய மாதிரி ஏற்பாடு பண்ணி தந்து இருக்கிறார்கள். இது மாதிரி பல்வேறு உதவி செய்யக்கூடிய மத்திய அரசுக்கும் சரி மாநில அரசுக்கும் சரி நன்றி தெரிவிக்கின்ற வகையில் இந்த விழாவை தீப்பெட்டி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடனும் நினைச்சோம் மத்திய அரசு நன்றி தெரிவிக்கின்ற விழா சிறப்பாக நடைபெற்றது. மாநில அரசுக்கு நன்றி தெரிவிக்கின்ற விழா கொண்டாட நினைத்தோம் என்றார்.
முதலமைச்சர் எங்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக