குடியாத்தத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 அக்டோபர், 2025

குடியாத்தத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி !

குடியாத்தத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி !
குடியாத்தம், அக்23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத் திற்குட்பட்ட கொண்ட சமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணா கார்டன் பகுதியில் உள்ள 
லெனின் நகர் வள்ளலார் நகர் சக்தி நகர் பகுதிகளில். நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. 
மேலும் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது பச்சை பாசி படர்ந்து காணப்படுகிறது இதனால் கொசுக்கள் உற்பத்தி ஆகி வருவதோடு அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது
அதியவாசி தேவைகளுக்கு வெளியே வர முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றன மேலும் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது இது சம்பந்தமாக . வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க கடந்த 16ஆம் தேதி அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி . அலுவலகத்தில் முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து அப்பகுதியில் ஊற்று நீர் போல் அதிகமாக இருப்பதால் மழை நீர் வெளியேற முறையான கால் வாய் கட்டமைப்பு இல்லாததால் மழைநீர் கள் தேங்கியுள்ளன போர்க்கால அடிப் படைகள் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து ள்ள மழை நீரை அப்புறப்படுத்த அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டு ள்ள புதிய கால்வாய்களை தேசியநெடுஞ் சாலைகள் செல்லும் கால்வாயில் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad