அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22 ம் தேதி புதன்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ராமு உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வரும் 27 ஆம் தேதி மாலை சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் கந்த சஷ்டி விழாவில் ஆறு நாட்கள் தங்கியிருந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாட்டில் சோப்பு, சீப்பு, பற்பசை மற்றும் பல் துலக்கி உள்ளடங்கிய சுகாதாரப் பொருட்களை கோவில் தக்கார் இரா. அருள்முருகன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செயல் லுவலர் ராமு, முன்னாள் இணைய ஆணையர் ஞானசேகரன் மற்றும் கந்த சஷ்டி விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் திருக்கோயில் வாளாகத்தில் தங்கிருந்து விரதம் இருக்கும் பக்தர்கள் திருக்கோயில் தகவல் மையத்தில் தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து சுகாதார பொருட்களடங்கிய தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக