திருப்பத்தூர் மாவட்டத்தில் ஐந்தரை லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என கலெக்டர் கோரிக்கை!
திருப்பத்தூர் ,அக 13 -
திருப்பத்தூர் மாவட்டம் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் சனிக்கிழமை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசினார். இந்த நிலையில் அதேபோல திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி எலவம்பட்டி கிராமத் தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவல்லி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் தேவைகள் குறித்தம் அதேபோல கிராமத்தின் செலவு விபரங் கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி திருப் பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் சுமார் ஐந்தரை லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வேலை வாய்ப்பு அலுவலகம் உள்ளது அதில் சிறப்பு தொகுப்புகளும் நடைபெறுகிறது அதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் அப்போது கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ நல்லதம்பி
குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு எடுத்து வருகிறது அதனையும் தவிர்க்க வேண்டும்.
மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.
இந்த கிராமசபை கூட்டத்தில் திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம், ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் கந்திலி ஒன்றியம் சேர்மன் திருமுருகன் துணைச்சார்மன் கந்திலி மோகன் குமார், அரசு அதிகாரி கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக