மைக்கா மேடு பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைத்த எம் எல் ஏ !
திருப்பத்தூர் ,அக் 13 -
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த எலவம்பட்டி ஊராட்சி மைக்காமேடு கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. நல்லதம்பி எம். எல்.ஏ கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்க ளுக்கு ரேஷன் பொருட்களின் வழங்கி னார். அப்போது, இந்த ஆட்சி பெண்களுக் கான ஆட்சி. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். இதில் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தர், கந்திலி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு முருகன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக