கஞ்சா வழக்கில் ஒருவர் கைது... சிறை... ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 அக்டோபர், 2025

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது... சிறை... ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.

கஞ்சா வழக்கில் ஒருவர் கைது... சிறை... ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, தக்கலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு தக்கலை, போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காற்றாடி முக்கு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த அருமனை நுள்ளிவிளை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் லிபின் (29) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுவிலக்கு காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad