கன்னியாகுமரி மாவட்டம் - இரணியல் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட திங்கள்நகரிலிருந்து கருங்கல் செல்லும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்கில்,
போர்வேல் தோண்டும் வாகன ஓட்டுனர் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த ரமேஷ் (46) என்பவர் இரவில் வாகனத்தினை நிறுத்திவிட்டு ஓரத்தில் கீழே படுத்து உறங்கி கொண்டிருந்தர்.
நள்ளிரவில் பெட்ரோல் பங்கில் உள்ளே வந்த தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று உறங்கி கொண்டிருந்த ரமேஷின் மீது ஏறி இறங்கியதில், தலைநசுங்கி சம்பவ இடத்திலே ரமேஷ் உயிரிழந்தார்.
தகவலின் அடிப்படையில் இரணியல் காவல் நிலைய போலீசாரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருவிதாங்கோடு கிளை மருத்துவ அணி செயலாளர் அசார் அவர்களின் தலைமையிலான குழு, சடலத்தை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.
மோதிய தனியார் சுற்றுலா வாகனம் குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக