காட்பாடி அரசுமகளிர் பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 அக்டோபர், 2025

காட்பாடி அரசுமகளிர் பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு!

காட்பாடி அரசுமகளிர் பள்ளி மாணவிகள்   நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு!
காட்பாடி , அக் 2 -

 வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக  ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு விழா பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.பள்ளியின் தலை மையாசிரியர் கோ.சரளா தலைமை தாங்கினார் உதவித்தலைமையாசிரியர் எம்.மாரிமுத்து முன்னிலை வகித்து பேசினார்.  திட்ட அலுவலர் எம்.அன்ன பூரணி வரவேற்று பேசினார்.ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார். 
 பள்ளி கட்டிட குழு உறுப்பினர் லோக நாதன் திருப்ப தூர் கல்வி மாவட்ட முன்னாள் மாவட்ட திட்ட தொடர்பு அலுவலர் இல.சீனிவாசன், முதுகலை தமிழாசிரியை நிவேதிதா, கலைவாணி ஆகியோர் வாழ்த்தி பேசினர், ஏழு நாட்கள் நடைபெற்ற முகா மில் மரக்கன்றுகள் நடுதல், சுற்றுப்பு சூழல் தூய்மை செய்தல் நோய் பரவாமல் பாதுகாத்துக் கொள்ளு தல் கண் தானம் பற்றி விழிப்புணர்வு போதை பொருளு க்கு எதிரான விழிப் புணர்வு பேரணி பனை விதைகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை செய்தனர்.
வேலூர் மாநகராட் சியின் 1வது மண் டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெ.கே.தாமஸ், மகேந்திரன், மாவட்ட தொடர்பு அலுவலர் ஜி.சாமிபிள்ளை ஜான்சன், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா மகேந்திரன், சித்ராலோகநாதன், போக்குவரத்து காவல் குழுமத்தின் இரா.சீனிவாசன், பி.என்.ராமச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் மேரிகுளோரி யா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியை டி.என்.ஷோபா, முதுகலை ஆசிரியர்கள் பிரேமலதா, எஸ்.வெங்கடேசன், சுதா, வணிகவியல் ஆசிரியர்கள் ராஜராஜேஸ் வரி, லதா, முதுகலை தமிழாசிரியை டி.ராஜேஸ்வரி,  ஓய்வுபெற்ற தலைமை யாசிரியர் எ.சிவக் குமார், ஆகியோர் தினந்தோறும்பல்வேறு தலைப்புகளில்  பேசினர்.நாட்டு நலப் பணி திட்ட தொண் டர்களுக்கு நினைவு பரிசுகளை ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா. ஜனார்த்தனன் வழங்கி பேசினார் முடிவில் உதவி திட்டஅலுவலர்  கலை வாணி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad