திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி



தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான வார விழாவை முன்னிட்டு (09.10.2025) அன்று திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.N.ரோடு, நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பியூரோ விரிஸ்டாஸ் (BUREAU VERITAS) என்ற நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர் ரமேஷ்,  கணினி வழி குற்ற பிரிவு  ஆய்வாளர் திருமதி.ரோஸ்லின் சாவியோ, மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்ட பிரிவு அமைச்சுப் பணியாளர் திருமதி.மகேஸ்வரி  ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள். இந்நிகழ்வில் பியூரோ விரிஸ்டாஸ் (BUREAU VERITAS) என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad