இரணியல் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள மது பாரை நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் மாலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் இரவிலும் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இரவு நடந்த பேச்சு வார்த்தையின் போது மது பாரை நிரந்தரமாக மூடுவது எனவும், மதுக்கடையை தற்காலிகமாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,
போராட்டக்காரர்கள் மதுக்கடையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறி கலைந்து சென்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக