அக்டோபர் 19, தூத்துக்குடி சுனாமி காலனி சேர்ந்தவர் முனியசாமி. மீனவர். இவரது வீட்டிற்கு அருகே குடியிருக்கும் சக்தி குமார் (18) என்பவர் குடித்துவிட்டு இவரிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முனியசாமி தனது மனைவி லட்சுமியுடன் வீட்டிற்கு முன்னர் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சக்திகுமார் அவதூறாக பேசி அருவாளால் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரி பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திகுமாரை கைது செய்தனர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக