தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கடந்த அக்டோபர் 19, 2025 அன்று பெய்த கனமழையால், 53வது வார்டு, முத்தையாபுரம், தெற்குத் தெரு பிரதான சாலையில் தண்ணீர் தேங்கியது.
கழிவுநீருடன் கலந்த மழைநீரை நகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை.
இந்த சூழ்நிலை பொதுமக்களிடையே நோய் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல நிர்வாகம், கழிவுநீர் கலந்த மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக