தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாக நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 அக்டோபர், 2025

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாக நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு.

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (21.10.2025) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர். மதன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் சுதீர், குருவெங்கட்ராஜ், அசோகன், ஜமால், மகேஷ்குமார், அருள், ஆவுடையப்பன், நிரேஷ், ஜெகநாதன், ராஜு, ராமச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் தங்கள் சீருடைகளில் கருப்பு ரிப்பன் அணிந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் போது உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களை பணியின் போது உயிர் நீத்த காவல்துறையினரின் பெயர்களை நினைவு கூர்ந்தார்.
 
பின்னர் 54 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad