மழை தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 அக்டோபர், 2025

மழை தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.

மழை தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா பிரான்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டுபிராஞ்சேரி கிராமத்தில் நடுத்தெருவில் பொது மக்கள் அனைவரும் செல்லக்கூடிய இடத்தில் குளம்போல் தண்ணீர் பெருகி உள்ளதால் பொது மக்கள் நடந்து செல்லமுடியாமலும், சிறுவர்கள், முதியோர்கள் நிலை தடுமாறி சறுக்கி கீழே விழுந்து செல்லுகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றது. கடந்த 10 நாட்களாக இதே நிலைதான் இருக்கின்றது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் இந்த மழைக்காலத்தில பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக 
சீர் செய்து தரும்படி ஊர் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்ல ஊர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள் 

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad