உடுமலையில் குப்பை மேடாகும் குட்டை திடல் அறப்போர் இயக்கம் புகார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

உடுமலையில் குப்பை மேடாகும் குட்டை திடல் அறப்போர் இயக்கம் புகார்


உடுமலை பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மையப் பகுதியில் அமைந்திருக்கும் குட்டை திடலில் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலை அமைந்துள்ளது  இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பகுதியாகும் இந்த பகுதியில்  பொதுக்கூட்டங்கள் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த குட்டை திடலில் நடைபெறும் மேலும் எதிரில் காவல் நிலையம் மறுபுறம் நூலகம் இன்னொருபுறம் உடுமலை நாராயண கவி அவர்களின் நினைவிடம் மற்றும் படிப்பகம் உள்ளது இந்த நிலையில் இங்கு சமீப காலமாக சாக்கடை மண் உள்பட பெரிய கற்கள் கழிவு மண் உள்ளிட்ட குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர் இதனால் இந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது இதை உடனடியாக அப்புறப்படுத்தி இந்த பகுதியை சுத்தம் செய்து தர வேண்டும் என்று நிறைய பேரு அறப்போர் இயக்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad