திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை கழிவுகளை பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபடுத்தும் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர்கள் பேரவை மாநில துணை செயலாளர் கு சோழன் அவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார் இது பற்றி அவர் கூறியதாவது
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை அடைப்புகளை நீக்குவதற்கு இயந்திரங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகின்றது
திருப்பூர் மாநகராட்சி ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் மூககவசம் கையுறை காலுறை எதுவும் கொடுப்பதில்லை இந்த செயலை ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை தொடர்ந்து வன்மையாக கண்டித்து வருகின்றது அந்த வகையில் தற்போது
திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலம் 52 வது வார்டு தென்னம்பாளையம் ரேஷன் கடை எதிரில் உள்ள கழிவுநீர் சாக்கடையில் திருப்பூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இயந்திரங்கள் இல்லாமல் சாக்கடைகளை கையால் அள்ளும் அவல நிலையை ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக