பல ஆண்டுகளாக நமக்கு நன்மை கிடை க்கும் என எதிர்பார்க்கும் அருந்ததியர் காலனி மக்கள் திமுக ஆட்சியில் நிறை வேற்றப்படுமா!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலு கா, வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலணியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன 50க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூலம் சாலை அமைத்து தரப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு 2015-ல் வந்த காட்டாறு வெள்ளத்தின் காரணமாக சாலைகள் அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்து விட்டது. அதன் பிறகு சாலை அமைத்து தர வேண்டி அனைத்து விண்ணப்பத்தையும் பஞ்சாயத்து தலை வரிடம் கொடுத்தும் எந்த வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. அனைக்கட்டு தொகுதி எம் எல் ஏ ஏபி நந்தகுமார் வேலூர் எம் பி கதிர் ஆனந்த் என அனை வரிடத்திலும் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை மனு கொடுக்கும் நேரம் அந்த நேரம் மட்டும் உறுதி அளித்து விட்டு அதன் பிறகு செய்யாமல் போய் விட்டனர். இது போன்று அனைத்து துறை அதிகாரி களிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே அடிப்படை வசதி இல்லாத ஒரு தெருவாக அருந்ததியர் காலனி உள்ளது. இதன் விளைவாக அங்கு வசிக்கும் சிலர் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டனர் சரியான சாலை வசதி இல்லாததால் அங்கு வாழும் அருந்ததியர் இன மக்கள் பள்ளிக்கு செல்வதிலும் வேலைக்கு செல்வதிலும் கல்லூரி செல்வதிலும் மிக இடையூறாக உள்ளது அதுமட்டுமில்லாமல் வயதான முதியவர்கள் சாலையில் மன் தரையில் வழக்கி விழுந்து ஆபாயகரமான நிலை யில் தான் அந்த சாலை உள்ளது வருடத் திற்கு ஒரு முறை வரும் பருவ மழையின் காரணமாக காட்டாறு வெள்ளம் ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இதனால் அந்த இடத்தை விட்டு வெளி யேற முடியாமல் மக்கள் தங்களது வீட்டுக் குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் மிக பாதிப் படைந்துள் ளது இதனை அறிந்து எந்த அரசும் எவ்வித நிவாரண உதவியும் அவர்களு க்கு அளிக்கவில்லை.இந்த வல்லண்ட ராமம் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் நன்றாக சாலை வசதி உள்ளது. ஆனால் அருந்த தியர் காலனி யில் மட்டும் இந்த அழுகு டைந்த சாலை உள்ளது. ஏன் அதிகாரிகள் இவ்வளவு மெத்தனம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அருந்ததி யர்கள் இன மக்கள் உபயோகப்படுத்தும் சாலை மட்டும் மிக பழுதடைந்து உள்ளது. அதை பார்ப்பதற்கு ஒரு காடு போல காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி யில் வாழும் மக்கள் மிகுந்த வேதனை அடைந்து தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர் என தெரிவித்தனர். தமிழக அரசுக்கும் அரசு அதிகாரிகளுக் கும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் சார்பில் உடனடியாக சாலை அமைத்து தரவும் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை மனு.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக