காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக மனநலம் ஆரோக்கிய தினம் கொண்டாட்டம்!
குடியாத்தம் , அக் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் அறிவுறுத்தலின் படி நிகழ்ச்சி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை அனைவரையும் வரவேற்றார் அத்தி கிளை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி அவர்கள் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட வேலூர் மாவட்ட மனநல திட்டம் மருத்து வர் புகளரசி MBBS., DPM அவர்கள் மற்றும் மாவட்ட மனநலம் திட்டம் சமூக பணியா ளர் அன்னை தெரசா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மனநலத்தோடு இருந்தாலே ஆரோக்கியமாக வாழலாம் மற்றும் யோகா, உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவை செய்வதின் மூலம் மன நலத்தோடு வாழ முடியும் என சிறப்புரை. ஆற்றினார் அத்தி செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர் . மாணவிகள் மனநல விழிப்புணர்வை நாடகம் மூலம் நடித்து காட்டினர். மேலும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
இறுதியாக மாணவிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் அத்தி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சௌ சுகநாதன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக