வேலூர் புத்தக திருவிழாவில் சமூகநீதி மாணவர் விடுதி நூலகத்திற்கு ரெட்கி ராஸ் நிர்வாகிகள் - தலைமையாசிரியர் நூல்கள் பரிசளிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 அக்டோபர், 2025

வேலூர் புத்தக திருவிழாவில் சமூகநீதி மாணவர் விடுதி நூலகத்திற்கு ரெட்கி ராஸ் நிர்வாகிகள் - தலைமையாசிரியர் நூல்கள் பரிசளிப்பு!

வேலூர் புத்தக திருவிழாவில் சமூகநீதி மாணவர் விடுதி நூலகத்திற்கு ரெட்கி ராஸ் நிர்வாகிகள் - தலைமையாசிரியர் நூல்கள் பரிசளிப்பு!
வேலூர்  , அக் ‌9 -

 வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை சுற்று சாலையில் அமைந்துள்ள சமூகநீதி மாணவர் விடுதி நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் கோட் டை மைதானத்தில் நடைபெற்று வரும் 4ஆம் ஆண்டு புத்தக திருவிழாவில் 5ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் நன்கொ டையாக வழங்கும் நிகழ்வு நடைபெற்றது 
 இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் வேலூர் மாவட்ட பொருளாளர் ஆடிடர் கே.பாண்டியன், மேலாண்மைக்குழு உறுப்பினர் பொறியியலாளர் பி.வேல் முருகன், காட்பாடி கிளை அவைத்தலை வர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், அவை துணைத்தலைவர் ஆர்.விஜய குமாரி குண்டுராணி ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமையாசிரியர் ஆ.ஜோசப்அன்னையா, மனிதநேய அறக்கட்டளை செயலாளர் ஜோசப்ராஜ் ஆகியோர் இணைந்து ரூபாய் 5ஆயிரம் மதிப்பில் புத்தக திருவிழா அரங்கில் வாங்கி வழங்கினர். சமூகநீதி மாணவர் விடுதியின் காப்பாளர் துரை.கருணாநிதி பெற்றுக்கொண்டார் மேலும் தலைமையா சிரியர் ஆ.ஜோசப்அன்னையா எழுதிய நூல்களையும் நன்கொடையாக வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது.   4ஆம் ஆண்டு புத்தக திருவிழா மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப் பட்டு அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வே.இரா.சுப்புலட்சுமி அவர்க ளுக்கும் புத்தக ஆர்வலர்கள் சார்பில் வரவேற்கின்றோம்.  மேலும் பள்ளி மாணவர்கள் தினமும் வருகை தந்து புத்தங்களை வாங்கி பயன் பெற வேண்டும்.  வாசிப்போம் நேசிப்போம் என்ற கொள்கையின் படி ஒவ்வொரு மாணவரும் தினம் ஒரு நூல் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.முன்னதாக ஶ்ரீதர் வரவேற்றார் நிறைவாக பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகி நரசிம்மன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad