தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றிய குழு சார்பில் 7 .10. 2025 செவ்வாய் கிழமை காலை 10:30 மணிக்கு அவிநாசி புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது
மத்திய அரசே
100 நாள் தொழிலாளர் அனைவருக்கும் வேலை கொடு.
100 நாள் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாவிட்டால் நிவாரணம் வழங்கிடு.
100 நாள் வேலைக்கான நிதியை கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யாதே ,
100 நாள் தொழிலாளர்களுக்கு நாட்களை அதிகரித்து சம்பளத்தை உயர்த்திடுக.
தமிழக அரசே
100 நாள் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகா ப்பு என்பதை மாற்றி முன்னாள் முதல்வர் கலைஞர் அறிவித்த விவசாய தொழிலாளர் நல வாரியமாக மாற்றிடுக.
100 நாள் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை உள்ள வர்களுக்கு தீபாவளி முன்னிட்டு ரூபாய் 5000 வழங்கிடுகஎன்பன கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அவிநாசி ஒன்றிய முழுவதும் பழங்கரை, வேலாயுதம் பாளையம், தெக்கலூர், ராமநாதபுரம்,
கானூர் ,ஆலத்தூர், பாப்பாங்குளம் சேவூர், வேட்டுவபாளையம் கருமாபாளையம்
ஆகிய ஊராட்சிகளில் இருந்து 180 பெண்களும்
28 ஆண்களும் மொத்தம் 208 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராகவும் தமிழக அரசை வழியுறுத்தியும் தோழர்கள். நாசரலி, ஷாஜஹான் ஆகியோர் கோசமிட்டனர் .
ஆர்ப்பாட்டத்திற்கு பின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய தலைவர்
வி .கோபால் தலைமையில் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய செயலாளர் இரா.முத்துசாமி துவக்க உரையாற்றினார்.
இறுதியாக
ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எம் .மோகன் ஒன்றிய பிஜேபி அரசு 100 நாள் தொழிலாளர்களின் நிதியை கட்டுமானத்துறைக்கு மாற்றுவதை கண்டித்தும், அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என கேட்டும்,
தமிழக அரசு விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் விவசாய தொழிலாளர்கள் 100 நாள் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள்
ஆர் .காளியப்பன் ஆர் .கருப்புசாமி
பி .சதாசிவம் மற்றும்
கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய நிர்வாகிகள் என்.செல்வராஜ் பி.அர்ஜுனன்
ஒன்றியக் குழு உறுப்பினர்கள்
ஆர். கந்தசாமி
கே. சாமிநாதன்
சேக்ஸ்பியர் பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ,
வி. எஸ். பழனிச்சாமி
சந்திரா , மற்றும் கட்சிகிளை நிர்வாகிகள்
யாசின், ரமேஷ்,
ஏ. ராமசாமி, அவிநாசி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகளும்
கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் நல வளம் சங்கத்தின் செயலாளர்
ஏ .எல். ராமச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும்
மதியம் 12.30 மணி அளவில் அவிநாசி ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது..
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக