திருப்பூரில் முப்பெரும் விழா அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 அக்டோபர், 2025

திருப்பூரில் முப்பெரும் விழா அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்பு


 தியாகி திருப்பூர் குமரன் நினைவு அறக்கட்டளை சார்பில் திருப்பூர் கோவில் வழி தெற்கு பஸ் நிலையத்திற்கு திருப்பூர் குமரன் பெயர் சூட்டிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருப்பூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதற்கு விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை தாங்கினார் அறக்கட்டளை செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார் மாண்புமிகு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார் விழாவில்  வடக்கு திமுக மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர திமுக பொறுப்பாளர் தங்கராஜ், ஒன்றாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 22 வது வார்டு கவுன்சிலர் V. ராதாகிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் நடராஜன், மாநகர துணை செயலாளர் ராமசாமி, மாநகர பொருளாளர் சரவணகுமார், திமுக நிர்வாகி சிவபாலன் EX MC, 21 வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி, 22 ஆவது வார்டு செயலாளர் ராஜ்குமார் ,அசோக், பாலு, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad