திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி முன் பகுதியில் பேராசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 அக்டோபர், 2025

திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி முன் பகுதியில் பேராசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூர் தூய நெஞ்ச  கல்லூரி முன் பகுதியில் பேராசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் , அக் 22 -

திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி முன் பகுதியில் பேராசிரியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் பேராசிரியர்கள் சங்கங்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு சட்டபேரவையில் சட்டத்திருத்தத்தை முன்மொழிந்தது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.  
 பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தைச் (AUT) சார்ந்த பேராசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் தமிழக அரசு க்கு எதிர்ப்பை தெரிவிக்கும் பதவிக ளோடு வாயில் முழக்கப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கிளையின் முன்பாக 50க்கும் மேற்பட்ட பேராசிரியர் கள் அலுவலர்கள் கருப்பு சட்டை அணிந்து, தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும்போது பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை வலியுறுத்தும் விதமாக பல்வேறு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad