பேர்ணாம்பட்டு இசுலாமியா மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்!
பேர்ணாம்பட்டு, அக் 5 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும்
நாட்டு நலப்பணித்திட்டம் 2025-2026
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஏழு நாட்களாக என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம் பேர்ணாம்பட்டு அருகில் உள்ள மசிகம் கிராமத்தில் நடைபெற்றது இம்முகாமில் கலந்துக்கொண்ட மாணவத் தொண்டர் கள் அக்கிராமத்தில் உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுற்றுப்புற தூய்மை கருத்தரங்கம்,போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பிளாஸ் டிக் ஒழிப்பு,சாலைப் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம்,சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி,நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி,நூறு மரக்கன்றுகள் நடப்பட் டது.மழைநீர் சேமிப்பு தொணட்டிகள் பராமரிப்பு செய்யப்பட்டது .
பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நான் முதல்ன் திட்டத்தின் உயிர்கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தொடர்ந்து ஏழு நாட்கள் மசிகம் கிராமத்தில் உள்ள பல்வேறு பொது இடங்களில் இருந்த தேவையற்ற செடிகள், குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது மேற்கண்ட முகாமின் நிறைவு நாள் உதவி தலைமையாசிரியர்வே.ஆனந்தன் தலைமையில்நடைபெற்றது.இவ்விழாவிற்கு பள்ளி மேலாளர் ஜனாப் எ.அம்ஜத் பாஷா முன்னிலை வகித்தார்.அரசு ஆதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியின் உதவி தலை மையாசிரியர் ஜே.உதய குமார் ,ஆசிரியர் எஸ் சதிஷ் குமார், சி.நாகராஜ்,டி.எம்.ராஜா உ.ஒ.குஉறுப் பினர்,ஆர்.தியாகராஜன்,எஸ்மாலதி சமூக ஆர்வலர் எஸ் .சசிகுமார் .ஆகியோர் கலந்து என்.எஸ்.எஸ் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பல்வேறு சேவைகள் ஆற்றி களப்பணியில் ஈடுபட்ட மாணவத் தொண்டர்களை பாராட்டி வாழ்துரை வழங்கி பாராட்டு சான்றி தழ்கள் மெடல் வழங்கி சிறப்பித்தனர்.இந்நிறைவு விழாவிற்கு வருகைப்புரிந்த அனை வரையும் திட்ட அலுவலர் பா.முகம்மது அலி முதுகலைஆசிரியர் வரவேற்றார் ஜனாப் ஜீ.பைசல் அகமது தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப் பாளர் தொகுப்புரையாற்றினார். உதவி திட்ட அலுவலர் ஜனாப் வி.எ.பிலால் பட்டதாரி ஆசிரியர் நன்றிவுரையாற்றினார் நாட்டுப்பண்னுடன் சிறப்பு முகாம்
நிறைவு விழா இனிதே நிறைவு பெற்றது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக