கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் ஆட்சியரிடம் கோரிக்கை !
குடியாத்தம் , அக் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளி கூட்ரோட் அருகே சுமார் 3. ஏக்கர் மேல் நிலப்பரப்பில் உள்ள குப்பை கிடங்கு குடியாத்தம் நகர பகுதி நகராட்சி குப்பைகள் தரம் பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த இடத்தில் குடியாத்தம் நகர பகுதியில் உள்ள கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பணி அமைக்க நிதி ஒதுக்கி நிலையில் பொது மக்கள் இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் என கோரிக்கை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே இரா சுப்புலெட்சுமியடம் கோரிக்கை மனுவை மேல்மூட்டுகூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் குமாரன் சிங்கல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது குப்பை கிடங்கு இடத்தை சுற்றி மேல்மூட்டுகூர். கூட நகரம். சிங்கல்பாடி. செருவங்கி. போஜனாபுரம். செட்டிகுப்பம். 06 ஊராட்சிகள் உள்ளன ஊராட்சிகளில் 40 ஆயிரம் குடும்பங்கள் சுமார் 80 ஆயிரத் துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றன எங்க பகுதி மக்களுக்கு ஏற்கனவே இந்த இடத்தில் குடியாத்தம் நகர பகுதியில் உள்ள குப்பைகள் இந்த இடத்தில் தேக்க செய்வதால் துர்நாற்றம் வீசுகிறது எங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவி வருகின்றன பலமுறை நாங்கள் குப்பை கிடங்கு வேண்டாம் என கோரிக் கை விடுத்தும் மீண்டும் கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் அமைப்புவதாக தினசரி நாளிதழில் தகவலை நாங்கள் படித்து அதிர்ச்சி அடைந்தோம் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு அமைத்தல் எங்கள் பகுதி மக்கள் நிலத்தடி குடி நீர் விஷமாக மாறி குடிநீர் அருந்தும் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் ஆகையால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் என மனுவில் கூறப் பட்டுள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக