தக்கலை அருகே உள்ள மேட்டுக்கடை புதுகாடுவெட்டி விளையை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 43). இவரது கணவர் டேவிட். 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. மகாலெட்சுமி தற்போது மேக்காமண்டபம் உடப்பன்குளம் வலியவீட்டுவிளை பகுதியில் வசித்து வருகிறார். இவரது 3-வது மகன் சுபின்(22). சென்னையில் பிளம்பராக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் சுபின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். சுபினுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி இரவு சுபின் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு தனது நண்பருடன் சேர்ந்து சாப்பிடுகிறேன் என கூறிவிட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் உள்ள உடப்பன்குளத்தில் சுபின் பிணமாக மிதந்தார். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபின் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக