திருப்பத்தூரில் பாமக சார்பில் செயற் குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு !
திருப்பத்தூர் , அக்-16
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மேற்கு மாவட்ட பாமக சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் அக்னி விஜய குமார் தலைமையில் நடைபெற்றது மாவட்ட தலைவர் சுதாகர், நகர செயலா ளர் வெற்றிவேல், மாவட்ட அமைப்பு செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளர் களாக பாமகவின் தலைமை நிர்வாக குழு உறுப்பினரும் மாவட்ட பொறுப்பா ளர் சதாசிவம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் எடப்பாடி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாக்கியராஜ், பிரகாசம், பிரபாகரன், சுப்பிரமணி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசு, மாவட்ட தலைவர் செளந்தர ராஜன், மாவட்ட வன்னியர் சங்க செயலா ளர் கணபதி, ஒன்றிய செயலாளர்கள் முனிமேகன், அனுமுத்தன், சிவசங்கர், ஊடக பேரவை மாவட்ட செயலாளர் S.R.G. கோபி, ஊடக பேரவை மாவட்ட தலைவர் M.அண்ணாமலை மற்றும் பாமக நிர்வாகி கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுப்பு பொறுப் பாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக