ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி.

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி.

 தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலையில் பிரசித்தி பெற்ற இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலி நடைபெறும் . 

அதன்படி  இம்மாதத்தின் முதல் வெள்ளியான இன்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மணப்பாடு மறை வட்ட முதன்மை குரு பென்சிகர் அடிகளார் கலந்து கொண்டு சிறப்பு மறையுரை வழங்கினார். 

இதில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  மதியம் உணவு வழங்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர்  சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை  டைட்டஸ்  மற்றும் திருத்தல நிதி குழுவினர்   இறை மக்கள் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad