ஆழ்வார்திருநகரி. அக் 2 தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆழ்வார்திருநகரி திவ்விய தேசத்தில் சதுர்வேதி மங்கலம் ராமானுஜர் சன்னதியில் திருவேங்கடமுடையான் திருவோணம் திருவிழா கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது.
இறுதி நாளான இன்று திருவோண நட்சத்திரத்இரத்தை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 9 மணிக்கு திருமஞ்சனம். 10 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை. 4.15 சேவா காலம்.
எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி துவங்கி அர்ச்சகர்கள் சீனிவாசன். ஸ்ரீதரன். அத்யாபகர்கள். திருவாய்மொழி பிள்ளை திருமலாச்சாரி. சேஷகிரி. திருவேங்கடாச்சாரி. பிச்சுமணி. ராமானுஜன் கிருஷ்ணன். சீனிவாசன். பெரியதிருவடி. அனந்த வெங்கடேசன். சம்பத். ஆகியோர் சேவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. ஆரியாஸ் பாபு. விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆழ்வார்திருநகரியில் நான்கு திசைகளிலும் திருவேங்கடமுடையான் சன்னதிகள் உள்ளன.
ஆதி நாதர் ஆழ்வார் கோவிலில் மேற்கு திசை நோக்கியும். தெற்கு மாடவீதியில் வடக்கு திசை நோக்கியும் வடக்கு ரதவீதியில் தெற்கு திசை நோக்கியும் ராமானுஜர் சன்னதியில் கிழக்கு திசை நோக்கியும் உள்ளது மிகவும் பிரபலமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக