மலையம்பாளையம் காவல் நிலையம் சார்பாக தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி !! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 அக்டோபர், 2025

மலையம்பாளையம் காவல் நிலையம் சார்பாக தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி !!



ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் கணபதிபாளையம் ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மலையம்பாளையம் காவல் நிலையம் இணைந்து நடத்திய தலைக்கவசம் அணிதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கொடுமுடி மண்டல துணை வட்டாட்சியர் சண்முகப்பிரியா, கொடுமுடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் தலைமையில் கணபதிபாளையம், சோளாங்கபாளையம் பகுதியில் நடைபெற்றது.. மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் எஸ் . வினோதினி  விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கியும், இரண்டு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள்  வழங்கினார்.

உடன் மலையம்பாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள் நடராஜன், ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள், தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்கள்..


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad