ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டத்தில்உறுப்பினர் வலியுறுத்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டத்தில்உறுப்பினர் வலியுறுத்தல்

ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தல்!
குடியாத்தம் ,அக் 3 -

வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் வேலூர் மாவட்ட பிலிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.இதில் குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் பங்கேற்று பேசி , வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மது செழியனிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் பெரும்பாடி கிராமத்தில் சாலை ஓரம் புறம்போக்கு இடத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர்  இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் எஸ்சி எஸ்டி மக்கள் பங்கேற்று தாட்கோ லோனுக்கு விண்ணப்பித்தனர் இவர் களுக்கு வங்கி மேலாளர்கள் லோன் வழங்க அலைக்கழிப்பு செய்கின்றனர் இது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ,குடியாத்தம் அடுத்த கீழ் சென்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ,
பேரணம்பட்டு  ,குடியாத்தம் பகுதியில் எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் சமூக ஒற்று மைக்காக விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து மனு அளித்தார் மேலும் இது குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி விசாரித்து வருகிறார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad