குடியாத்தம் பகுதியில் வயது மூப்பின் காரணமாக உயிர் இழந்த மூத்தாட்டின் கண்கள் தானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 அக்டோபர், 2025

குடியாத்தம் பகுதியில் வயது மூப்பின் காரணமாக உயிர் இழந்த மூத்தாட்டின் கண்கள் தானம்!

குடியாத்தம் பகுதியில் வயது மூப்பின் காரணமாக உயிர் இழந்த  மூத்தாட்டின் கண்கள் தானம்!
குடியாத்தம் , அக் 13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம்
விநாயகபுரம், எழில் நகரில் வசிக்கும்,  குடியாத்தம் ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் கே.எம்.ராஜேந்திரன் அவர் களின் மனைவி  ஆர் விமலா (வயது 61) உடல்நலக் குறைவால் 13/10/25 பிற்பகல் காலமானார். அம்மையாரின் கண்கள் அவரது குடும்பத்தார் ஒப்புதலுடன் வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இது குறித்து சங்க முன்னாள் செயலர் மதியழகன் முதல் தகவல் அளித்தார். சங்க தற்போதைய தலைவர் சந்திரன், முன்னாள் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்து உதவினர். இதற்கான ஏற்பாடுகளை சங்க  கண்-உடல் தானக் குழு தலைவர் எம்.ஆர்.மணி உடன் இருந்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad