தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் பள்ளி மேம் பாட்டுககாக பரிசுத் தொகை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 அக்டோபர், 2025

தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் பள்ளி மேம் பாட்டுககாக பரிசுத் தொகை !

தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் பள்ளி மேம்பாட்டுககாக பரிசுத் தொகை !

பேர்ணாம்பட்டு, அக் 13 -

பள்ளி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைத்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய பசுமை முதன்மை யாளர் (Green Champion) விருதின் பரிசுத் தொகை ரூ.1,00,000/-ஐ சமர்ப்பித்த தலைமை ஆசிரியர்

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 10.10.2025 வெள்ளிக் கிழமை மாலை 3.00 மணிக்கு பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 3 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான திறன் ஆய்வு (SLAS – State Level Achievement Survey) குறித்து விவாதிக்கப்பட்டது. மாணவர்கள் ஒவ் வொரு நாளும் பெற்றோரின் கண் காணிப்பில் படிப்பதை உறுதி செய்யவும், மாலை நேரங்களில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பங்கேற்பதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.தலைமை ஆசிரியரின் சிறந்த பங்களிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்கள், இவ்வாண்டு சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர்  வி.ஆர். சுப்பு லட்சுமி இ.ஆ.ப., அவர்களின் திருக்கரங்களால் ரூ.1,00,000 பரிசுத் தொகையும் பாராட்டு சான்றிதழும் பெற்றார்.அந்த பரிசுத் தொகையான ரூ.1,00,000-ஐ  முதலமைச் சர் தொடங்கி வைத்த “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக” பள்ளி மேலாண்மை குழு தலைவர்  ரேவதி, ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி சுமதி, மற்றும் 40-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கினார்.ஆசிரியர் களின் சமூகப் பங்களிப்பு அதேபோல், பள்ளியில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பள்ளி ஆசிரியர் செல்வி சி. கலைவாணி அவர்கள் ரூ.20,000 நிதி யுதவி வழங்கினார்.மேலும், கடந்த 10 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர் இல்லாத நிலையில், கடந்த 5 ஆண்டு களாக தலைமை ஆசிரியர் தனது சொந்த நிதியிலிருந்து ஆண்டிற்கு ரூ.36,000 ஊதியம் வழங்கி வந்த நிலையில், இன்று ஆசிரியர் திருமதி சே. பானு அவர்கள் துப்புரவு பணியாளர் ஊதியத் திற்காக ரூ.8,000 வழங்கினார் மொத்த நிதி ரூ.1,28,000 – பள்ளி மேம்பாட்டிற்கான சிறந்த முன்மாதிரி இவ்வாறு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணை ந்து மொத்தம் ரூ.1,28,000 நிதியை “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக” வழங்கினர். இதுவரை பள்ளி மேம் பாட்டிற்காக நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தில் ரூ.9,10,033/- ரூபாய் செலுத்தி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த அர்ப்பணிப்பு, பள்ளி மேம்பாட்டிற்கும் சமூக பங்களிப்பிற்கும் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி ரேவதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. சுதாகர் மற்றும் பெற்றோர்கள் கூட்டத்தில் பேசி பாராட்டு தெரிவித்தனர்.நிகழ்வில் பள்ளி மேலாண் மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad