சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டிசுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் சாதனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 13 அக்டோபர், 2025

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டிசுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் சாதனை!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டிசுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் சாதனை!
குடியாத்தம் ,அக் ‌13 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சிலம் பாட்டம்  கலைக்குழுவை சேர்ந்த  மாண வர்கள் சென்னை, கிண்டி, மான்போர்ட் மெட்ரிக் பள்ளியில், பென்னியாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அளவிலான சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் 25 ஆண்டுகளாக குடியாத்தம் சமூக சேவகர் சிவகுமாரின் இலவச சிலம்பம் பயிற்சி  நிர்வாகத்தின், சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழுவை சேர்ந்த 8 மாணவர்கள் மாஸ்டர் சிவக்குமார் தலைமையில் சிலம்பம் போட்டியில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி போட்டி யிட்டதில் 5 பேர் முதல் பரிசும், 2 பேர் 2ம் பரிசும், ஒருவர் 3ம் பரிசும் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கலைமாமணி ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகர் முத்துக்காளை, தி.மு.க. நிர்வாகி அண்ணாநகர் ராம்குமார், சீதாலட்சுமி கணேசன் ஆகியோர் பதக்கம், கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டினர். 8 மாணவர்களும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை பென்னியாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த ரகுபதி, ரகுநாதன், சங்கர், வினோத் மற்றும் பலர் செய்திருந்து போட்டியை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாநில மாவட்ட அளவில் திரளான வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே  வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad