ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங் களை உடனடியாக சி பி ஐ யிடம் வழங்க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 அக்டோபர், 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங் களை உடனடியாக சி பி ஐ யிடம் வழங்க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங் களை உடனடியாக சி பி ஐ யிடம் வழங்க 
கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!
வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியாத்தம் , அக் 22 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜன் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார் 
நகரச் செயலாளர் தீனா  (எ ) தினகரன் வரவேற்புரை ஆற்றினார். மற்றும் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்
ஆம்ஸ்டாங் கொலை வழக்கு ஆவணங் களை உடனடியாக சிபிஐ இடம் வழங்க வலியுறுத்தியும் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ இடம் வழங்காமல் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசை யும் காவல்துறையையும் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் கள் கலந்து கொண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது  எனவும் மேலும் தமிழக அரசை யும் காவல்துறையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்
இறுதியில் இளைஞரணி தலைவர் நவீன் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad