தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க உப்பளங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த உள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதி முள்ளக்காடு முத்தையாபுரம் புல்லாவழி பழையகாயல் வரை உள்ள உப்பள தொழிலை அழித்து கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்கப்பட கூடாது என்பதை வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார்,
நிர்வாகிகள் மந்திரமூர்த்தி,
பொன்ராஜ்,சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர் பாலசுப்பிரமணியன், ஈ பால்,உப்பளத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் பொன்ராஜ், பேச்சிமுத்து,பூமயில் பரமசிவன் முனியசாமி,
விவசாய சங்கம் ஜோதிமணி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர், மதசார்பற்ற ஜனதா தல மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார், ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன்,
தமிழக வெற்றி கழகம் ஜே.கே.ஆர். முருகன்,
நாம் தமிழர் கட்சி ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக்,அன்னலட்சுமி,ஐ.என்.டி.யு.சி.
தேசிய செயலாளர் கதிர்வேல்,
உழவர் உழைப்பாளர் கட்சி ராஜேஷ், மீனவர் சங்கம் முனியசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக