திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மேல் அச்சமங்கலம் ஊராட்சி இந்திரா நகர்
பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு
திருப்பத்தூர் , அக் 8 -
புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்த எம் எல் ஏ !
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம், மேல்அச்சமங்கலம் ஊராட்சி, இந்திராநகர் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலா ளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப் பினருமான க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தி னார்.இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சி. சுரேஷ்குமார், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி,
மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், ஊராட்சிமன்ற து.தலைவர் விசாலாட்சி பரமேஷ்,வார்டு உறுப்பினர்கள் ஞானசேகர், மங்கை புஷ்பராஜ் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக