ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)திவ்யான்ஷீநிகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜிம்ரன் ஜீத் சிங் கலோன் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் ஊராட்சியில் மேற்கொண்ட வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக கேட்டறிந்து பேசுகையில் சாத்தகோன் வலசை கிராமத்தில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
மேலும் பசுமையான பகுதியாக இந்த ஊராட்சி உள்ளது. இங்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன பேருந்து நிறுத்தம் மற்றும் கூடுதலாக பேருந்து சேவை இயக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள் இது தொடர்பாக போக்குவரத்து துறையின் மூலம் உரியை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
மேலும் மாற்றுத்திறனாளிகள் சார்பாக வீட்டுமனை பட்டா, வங்கி கடன் வழங்க கோரி உள்ளீர்கள். இது தொடர்பாகவும் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மேலும் வேளாண்மை துறை தோட்ட தொழிலாளர் துறை மூலமாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்க கோரி வழங்கி உள்ளீர்கள் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வீட்டின் குடிநீர் சுத்தமாகவும் உபயோகப்படுத்தும் குடிநீரை சுகாதாரமாகவும் பயன்படுத்த வேண்டும் வீடுகள் தோறும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொசு மருந்து அடிக்கவும் குப்பைகளை தினசரி சேகரித்து ஊராட்சியை தூய்மையாக வைத்திடவும், அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மழைக்காலங்களில் வீட்டில் உபயோகப்படும் தண்ணீரை திறந்து வைப்பதால் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்திடும் வகையில் தண்ணீரை மூடி வைத்திட வேண்டும் இது தொடர்பாக அலுவலர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு பின்பற்ற வேண்டும், மேலும் பொது சுகாதாரத் துறையின் மூலம் இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 219 முகாம்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது அலுவலர்கள் மூலம் உரிய பரிசீலனை செய்யப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும்
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு அதன் விவரம் அரசுக்கு அனுப்பப்படும் எனவே பொதுமக்கள் இது போன்ற நடைபெறும் கிராம கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வழங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு பொதுமக்களிடம் கலந்துரையாடிய நிகழ்ச்சியின் நேரலையை சாத்தக்கோன் வலசை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பொதுமக்களுடன் பங்கேற்று பார்வையிட்டனர்.
இக்கூட்டத்தில் சத்தக்கோன் வலசை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஊராட்சி செயலர் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் வேளாண்மை துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் பாபு உதவி இயக்குனர் ஊராட்சிகள் பத்மநாபன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயமுருகன், சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக