காட்பாடி தீயணைப்பு நிலையத் தில் வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் கருத்தரங்கம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் மாணவர்கள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 அக்டோபர், 2025

காட்பாடி தீயணைப்பு நிலையத் தில் வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் கருத்தரங்கம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் மாணவர்கள் பங்கேற்பு!

 காட்பாடி தீயணைப்பு நிலையத் தில் வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் கருத்தரங்கம் ரெட்கிராஸ் நிர்வாகிகள் மாணவர்கள் பங்கேற்பு!
வேலூர், அக் 11 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமாஅகர்வால் அவர்களின் வழிகாட்டு தலின்படி  காட்பாடி தீயணைப்பு நிலைய த்தில் தமிழ்நாடு அரசின் உயரிய திட்ட மான தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு  முயற்சியை இத்துறை துவங்கியுள் ளது. இன்று காலை 10 மணியளவில் காட்பாடி நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு  காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலை மை தாங்கினார். ஆர்.ஐ.சி.டி கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஸ்ரப், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசன், பி.வேல்முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்தீயணைப்பு ஆணையத்தின் மாநிலக்குழு உறுப்பினர் டாக்டர் அ.மு.இக்ராம் சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்று தீ தடுப்பு முறைகள் குறித்து பேசினார்.  
இந்த நிகழ்வில் நிலைய அலுவலர் நா.பாலாஜி மற்றும் நிலைய வீரர்கள்  ஆர்.கோபாலகிருஷ்ணன், ஆர்.சதீஷ் குமார், ஏ.குமரேசன், வி.பரத்குமரன், மு.முஹம்மது பாரூக், ஆகியோர் வாரு ங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் தீ தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.  காட்பாடி அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி மேலாண்மை குழு உறுப்பினர்கள் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், பி.என்.ராமச் சந்திரன், தேவ்ராஜ் ஜெயின், ஆர்.சுதாகர், எ.ஆனந்தகுமார் லயன்ஸ் சங்க தலைவர் ரத்தினம், கருப்பசாமி, பாத்திமா இளஞ் செழியன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு  முயற்சியை இத்துறை துவங்கியுள் ளது.  பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீப்பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இந்த பயிற்சியில் தீயணைப்பான்களை பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை எல்பிஜி கேஸ் விபத்து பற்றிய விழிப்புணர்வு மின்சார விபத்துக் கள் மின்சார தீ விபத்து ஏற்பட்ட உடன் செய்ய வேண்டியவை வாகன தீ விபத்து ஏற்பட்டால் செய்யக்கூடாதவை பட்டாசு வெடிக்கும் போது செய்யக்கூடாதவை பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது தமிழ் நாடு முழுவதும் 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களில் நடைபெறும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக காட்பாடி நிலையத்தில் நடைபெற்றது.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதுமுள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைங்களில் உள்ள பணியாளர்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை நடத்துவார்கள்.  இந்த வகுப்புகள் ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் காலை 10.00 முதல் 11.00 மணிவரை, மதியம் 12.00 முதல 13.00 மணிவரை மற்றும் மாலை 16.00 முதல் 17.00 மணிவரை நடைபெறும். என்பதை தெரிவித்தனர் 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad