காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை
அக். 30- முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (24). சப்கோல்டிங் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த ஒரு மாத காலமாக உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பெண்ணின் வீட்டார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றுள்ளார்.
தூங்கச் சென்ற மாரிமுத்து நேற்று வெகுநேரமாகியும் வெளியே வராததால் மாடியில் உள்ள கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக