சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில்மழை யால் சேதமடைந்த கழிவுநீர் தொட்டியை, புதியதாக அமைக்கும் பணியை மேற் கொண்ட நெமிலி ஒன்றிய சேர்மேன்!
ராணிப்பேட்டை , அக் 25 -
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுண மல்லி ஊராட்சி, சம்பத்துராயன்பேட்டை கிராமம், விநாயகபுரம் தெருவின் நடுப் பகுதியில் 2 இடங்களில், பாதாளசாக் கடை கழிவுநீர் தேக்கத் தொட்டி உள்ளது. இவை 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட் டது. சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக இதில் அடைப்பு ஏற்பட்டு, தொட்டியின் மேல் சிலாப்பு உடைந்தது. இதனால் அந்த சாலையில் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் மிகுந்த சிறமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு நேரில் சென்று ஆய்வு செய்து, உடனடியாக 2 இடங்களிலும் புதியதாக கழிவுநீர் தொட்டியை அமைக்கும் பணியை மேற்கொண்டார்.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, நெமிலி ஒன்றிய சேர்மனுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது சிறுணமல்லி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம், புருஷோத்தமன், தங்கராஜ், சூரியகுமார், ஞானமூர்த்தி, பிரபாகரன், லோகநாதன், சக்திவேல், கோபி, உமாபதி மற்றும் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக