தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியவர் பரிதாபமாக பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 அக்டோபர், 2025

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியவர் பரிதாபமாக பலி.

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியவர் பரிதாபமாக பலி
       
பிராட்வே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள விதி எண் 3, கருப்பு பக்கம், கிராக்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருப்பவர் ராஜ் மாசானம். இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். 

மேலும், ஜோரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் பிராட்வே சுந்தர் இயக்கியுள்ள உயிர் மூச்சு திரைப்படத்தில் புது மாப்பிள்ளையாக நடித்தவர். தற்போது சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ராஜ் மாசாணம், தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். 

உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவரது உடலை தூத்துக்குடி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் ராஜ் மாசானம் விபத்தில் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டு, இயக்குனர் பிராட்வே சுந்தர் மற்றும் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad