தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களை சார்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தங்கள் கார்களிலோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களிடமோ உள்ள கார்களை இரவல் வாங்கி கொண்டு அத்தியாவசிய தேவைக்கு அவர்கள் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பி கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டு இருக்கும் கார்களை வாடகை கார் என்று கூறி போக்குவரத்து துறையினர் தடுத்து அதிகப்படியான அபராதம் விதித்து வருவது
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும். ஏனென்றால் பொது மக்கள் தாங்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நினைத்து அவசர தேவைக்காக பயன்படுத்தபடும் கார்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் தனியார் பேருந்து நிறுவனங்கள் அவர்கள் இஷ்ட்டபடி கட்டணத்தை அதிகமாக ஏற்றி வருவதால் அவர்களின்(தனியார் டிராவல்ஸ்)கட்டண கொள்ளைக்கு வழி வகுப்பதாகா அமையும் எனவே தமிழக போக்குவரத்து துறையினர் பொது மக்கள் தாங்கள் சொந்த ஊருக்கு செல்லும் எந்த கார்களுக்கும் தீபாவளி வரை அபராதம் விதிக்காமல் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக