மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் மோர்தானா அணையை பார்வையிட்டு ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் மோர்தானா அணையை பார்வையிட்டு ஆய்வு !

மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் மோர்தானா அணையை பார்வையிட்டு ஆய்வு !
குடியாத்தம் , அக் 7 -

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மோர்தானா அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோர்தானா அணையை சுற்றுலா தளமாக மாற்ற  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். மோர்தானா அணையை விரைவில் சுற்றுலா தளமாக மாற்றப்படும். மோர் தானா அணை  சுற்றுலா தளமாக மாற்றிய பின்னர் பொதுமக்கள் தினசரி வந்து  செல்ல 3 பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும், பொது மக்கள் பாதுகாப்பிற்காக புறகாவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா கிராமம், கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அனை 1990 -ம் வருடம் பணிகள் தொடங்கப்பட்டு 2001 ஆம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட் டது. மோர்தானா அணையானது 475 மீட்டர் நீளத்திலும், 11.50 மீட்டர் (37.73 அடி) உயரத்தில் 261.360 மி.க.அடி கொள்ளள வில் நீரை தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மோர்தானா அணையிலிருந்து 4.50 கி.மீ தொலைவில் ஜிட்டப்பள்ளி என்ற கிராமத்தில் எடுப்ப ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த எடுப் பணையிலிருந்து பொதுக்கால்வாய் 4200 மீட்டர் நீளம் கடந்து ஜங்காலப்பள்ளி என்ற கிராமத்தில் வலதுப்புற பிரதான கால்வாயாகவும் மற்றும் இடதுப்புற பிரதான கால்வாயாகவும் பிரிகின்றது. பொதுக்கால்வாய் 4.20 கி.மீ நீளத்தில் 110.58 ஏக்கர் நேரடி பாசனமும், 5 கிராமங் களும் வலதுபுற பிரதான கால்வாயின் 43.50 கி.மீ நீளத்தில் 12 ஏரிகளும் 25 கிராமங்களும் 3937.63 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இடதுபுற பிரதாள கால்வாய் 32.25 கி.மீ நீளத்தில் 7 ஏரிகளும், 19 கிராமங்களும் 4227.023 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கிறது. மொத்தம் 8367 ஏக்கர் நிலங்கள் பாசனம் பயன்பெறும் வகையில் மோர்தானா அணையின் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மோர்தானா அணை அமைக்கப்பட்டு இதுவரை ஒன்பது முறை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்தாண்டு 10 வது (24.09.2025) முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மோர்தானா அணையின் இன்று 07.10.2025 காலை 8.00 மணி நிலவரப்படி அணை முழு கொள்ளளவை எட்டி இருந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து 460 கன அடி வெள்ளநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., குடியாத்தம் சட்டமன்ற  உறுப்பி னர் வி.அமுலு விஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர்  சுபலட்சுமி,  நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியா ளர் பவளக்கண்ணன், செயற்பொறியா ளர் வெங்கடேஷ், வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், ஒன்றியக்குழுத்தலைவர்கள் 
என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம்), 
சித்ரா ஜனார்தனன் (பேர்ணாம்பட்டு), ரவிசந்திரன் (கீ.வ.குப்பம்), வே.வேல்முரு கன் (காட்பாடி), குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தரராசன், பேர்ணாம்பட்டு நகர்மன்ற துணைத்தலைவர் ஆலியார் ஜுபேர் அஹ்மத் உட்பட பலர் உடனிருந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad