நாசரேத் சீரணி அரங்கத்தில் இருந்து பிரதான சாலை வழியாக சந்தி, மர்க்காசிஸ் மேனிலைப்பள்ளி, புனித லூக்கா மருத்துவமனை, மார்கெட் வழியாக கோர்னேலியசு தெரு வரை சென்று திரும்பும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியை நாசரேத் காவல் ஆய்வாளர் வன சுந்தர், தொழிலதிபர் செந்தில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சுமார் 500 கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் திரளாக பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் ஆகியோருக்கு ரொக்க பணம், சிறப்பு பரிசுடன் சான்றிதழ் வழங்கப்பட்டன.
A B C என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் A பிரிவில் துளசிமணி முதல் இடத்தை பிடித்தார். B பிரிவில் கிருபாகரன் முதல் இடத்தை பிடித்தார், C பிரிவில் அன்பு செல்வன் முதல் இடத்தை பிடித்தார்.
இப்போட்டிக்காண ஏற்பாடுகளை நம்ம நாசரேத் நல்ல நாசரேத் அமைப்பின் பொறுப்பாளர்கள், சுற்று சூழல் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக