பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 10 அக்டோபர், 2025

பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

பென்ஷன் வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!
வேலூர் , அக் 10 -
 
வேலூர் மாவட்டம் இந்திய பாரளுமன்றத் தில் சமர்பிக்கப்பட்ட பென்ஷன் வேலி டேஷன் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐந்தாம் கட்ட போராட்டமாக இன்றைக்கு டெல்லி ஜந்தர் மந்திரில் அகில இந்திய அளவிலே ஒரு மாபெரும் எதிர்ப்பு தர்ணா போராட்டம் துவங்கி நடந்து வருகிறது. அதை ஆதரிக்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் சிவில் பென்சனர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FCPA) முடிவில் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் இன்று பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்  கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம்  தலை மையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய தொலைபேசி துறை ஓய்வூதியர் சங்க (AIBDPA) மாநில தலைவர் சி. ஞானசேகரன் சிறப்புரை யாற்றினார்.கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பி.லோகநாதன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு அனை த்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் தோழர் ரவி, ஆயுள்காப்பீட்டு கழக ஓய்வூதியர் சங்க  கோட்ட செய லாளர்  செந்தில்வேல், அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எ.கதிர்அகமது, தென்னிந்திய ரயில்வே ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொறுப் பாளர் பிரபாசந்தர், நரசிம்மன், ஆண்டாள் மணிவண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத் தினை ஆதரித்து பேசினர். AIBDPA மாவட்டச் செயலாளர்  பி.முருகன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார். 
 ஆர்ப்பாட்டம் காலை 10 மணி முதல் 12 மணி வரை எழுச்சியுடன் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசு  வேலிடேசன் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் பழைய ஓய்வூ திய திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை கோஷங்களாக எழுப்பினர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad