அனைத்திந்திய விவசாயம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வாராந்திர ஆலோசனை கூட்டம் திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள தலைமை செயலகத்தில் சங்க நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் மாவட்ட ஆன்மீக அணி தலைவரும் அம்மாபட்டி மாசாணி அம்மன் கோவில் அறங்காவலருமான முருகானந்தம் அவர்கள் கலந்து கொண்டு அஞ்சாமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் அதில் நாம் எடுத்துக்கொண்ட செயலில் மன உறுதியோடு எத்தகைய தடை வந்தாலும் அஞ்சாது வெற்றி பெரும் வரை ஒரு செயலை சிறப்பாக செய்து முடிப்பதே அஞ்சாமை தான் என்றார் தொடர்ந்து பேசிய சங்க நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தனது உரையில் தமிழகத்திலேயே 1260 க்கும் மேற்பட்ட சங்கங்கள் இருந்தாலும் வரலாற்று ரீதியாக நமது சங்கம் 9 ஆண்டுகளாக தொய்வில்லாமல் சிறப்பாக கடந்து வந்திருக்கிறோம் எத்தனையோ தடைகளை உடைத்து அஞ்சாமல் நாம் ஒரே சிந்தனையில் ஒரே கொள்கையோடு பயணித்து கொண்டிருக்கிறோம் ஒருபோதும் மற்றவர்களை குறை சொல்லி பழக வேண்டாம் குறைகளை கடந்து செல்லுங்கள் நிறைகள் தானாக உங்களை வந்தடையும் சிந்தியுங்கள் செயல்படுங்கள் என உரையாற்றினார் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஆறாவது வார்டு தலைவர் எஸ்.மணிகண்டன் முன்னிலை வகித்தார் மாநில சங்க பேச்சாளர் பி. சந்திரசேகரன் வரவேற்புரை யாற்றினார் திருப்பூர் மாநகர மாவட்ட துணை தலைவர் எஸ்.செல்வராஜ் உறுதிமொழி வாசித்தார் முன்னிலை வகித்த ஆறாவது வார்டு தலைவர் எஸ்.மணிகண்டன் நன்றியுரைடு வாராந்திர ஆலோசனைக் கூட்டம் இனிதே நடைபெற்றது விழா முடிவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக