காட்பாடி ரயில் நிலையத்தில் உத்திரப் பிரதேசம் பகுதியைச் சேர்ந்தவர் போலி டி டி ஆர் போல் வலம் அதிரடி கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 அக்டோபர், 2025

காட்பாடி ரயில் நிலையத்தில் உத்திரப் பிரதேசம் பகுதியைச் சேர்ந்தவர் போலி டி டி ஆர் போல் வலம் அதிரடி கைது!

காட்பாடி ரயில் நிலையத்தில் போலி டி டி ஆர் கைது!

காட்பாடி , அக் 15 -

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற உத்தரபிரதேச மாநிலத் தைச் சேர்ந்த ஹர்ஷித் ரஸ்தோகி (வயது 38) என்பவரை காட்பாடி ரயில்வே போலீ சார் நேற்று கைது செய்தனர். அவர் தன்னை டிக்கெட் பரிசோதகர் என்று கூறிய நிலையில், அடையாள அட்டையை சோதனை செய்தபோது அது போலியா னது என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad