மாவட்டஆட்சியர் அரங்கில் ஊராட்சிமன்ற தலைவரின் ஊழலை விசாரிக்க வேண்டு மென ஊராட்சிமன்ற உறுப்பினர்கள்மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 அக்டோபர், 2025

மாவட்டஆட்சியர் அரங்கில் ஊராட்சிமன்ற தலைவரின் ஊழலை விசாரிக்க வேண்டு மென ஊராட்சிமன்ற உறுப்பினர்கள்மனு!

மாவட்ட ஆட்சியர் அரங்கில் ஊராட்சி மன்ற தலைவரின் ஊழலை விசாரிக்க  வேண்டுமென ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் மனு!
திருப்பத்தூர் , அக் 28 -

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கட சமுத் திரம் ஊராட்சி மன்ற தலைவர் முறை கேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்
வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக திருமதி காயத்ரி அவர்கள் பொறுப்பேற்றது முதல் நான்கு ஆண்டு களாக ஊராட்சி நிதியில் முறைகேடுகள் அரசு நிதியை தவறாக பயன்படுத்துதல் டெண்டர் வைப்பதில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேலான வேலைகளை தனது சொந்த மாமனாரு பெயரில் தனது அதி கார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி பணிகள் மேற்கொண்டது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் கள் என எவருக்கும் தெரியாமல் பணி களை தேர்வு செய்வது அதை அவரே டெண்டர் வைத்ததாக அவரது கணவரே அந்தப் பணிகளை செய்வது மேலும் ஊராட்சி நிதி அளவு புத்தகம் செய்து பணி செய்கிறேன் என்ற பெயரில் ஓவர் சீஸ் அவர்களின் துணியோடு ஊராட்சி நிதியை கொள்ளையடித்தது என பல்வேறு புகார்கள் bdo ad panchayat  p d மற்றும் திங்கட்கிழமை மனுநீதி நாள் மூலம் தங்களிடமும் மூன்று முறைக்கு மேல் மனு அடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க மன அழுத்தி விட்டோம் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி அவர்கள் எவன் எங்காவது செல்லட்டும் என்னை எவனும் ஒன்றும் செய்து விட முடியாது நான் எல்லோரையும் பார்த்து விட்டேன் எங்கெங்கு பேச வேண்டுமோ அங்கெல்லாம் பேசி முடித்து விட்டேன் மேலும் எனக்கு வலது மற்றும் இடது கரமாக இரண்டு ஊராட்சி செயலாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இருக்கும் போது என்னை எவனும் எதுவும் செய்து விட முடியாது என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு எகத்தாளமாக பேசி எல்லோரையும் அசிங்கப்படுத்துகிறார் எனவே நாங்கள் கடைசியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உங்களிடம் மூன்று மாதங்க ளாக மனு கொடுத்து வருகிறோம் இதற்கும் தீர்வு இல்லை இதற்கு மேல் எங்கு சென்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பதை தாங்களே தெரிவிக்க வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் இல்லையென்றால் நாங்கள் ஒன்பது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாகத்தை கண்டித்து எங்களது பதவியை ராஜினாமா செய்து விடுகிறோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 செய்தியாளர். மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad