இராமநாதபுரம் விவசாய பயிர் காப்பீடு விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கொடியசைத்து துவங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 அக்டோபர், 2025

இராமநாதபுரம் விவசாய பயிர் காப்பீடு விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இராமநாதபுரம் விவசாய பயிர் காப்பீடு விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சம்பா பருவம் சிறப்பு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

நவம்பர் மாதத்தில் பருவ மழை பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே விவசாயிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெற்பயிர் காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ, ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கொடியசைத்து துவங்கி வைத்தார். 

மேலும் வறட்சி புயல் அதிக மழை போன்ற எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் இழப்புகளை ஈடு செய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெற இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் நடப்பு சம்பா சிறப்பு பருவ நெல்லுக்கு பிரீமியமாக ஏக்கருக்கு ரூபாய் 387.30 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் பயிர்களுக்கு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு செய்யவும் விண்ணப்பம் பதிவு செய்ய ஆதார் அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மற்றும் KYC பூர்த்தி செய்யப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும் எனவே பயிர் காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பெயர் வருவாய் கிராமத்தின் பெயர் புல எண், பரப்பளவு, வங்கி கணக்கு எண், முதலான விவரங்களை ரசீது சீட்டில் சரி பார்த்து பெற்றுக்கொள்ளவும் பிற பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில் வேளாண் துறை துணை இயக்குனர் பாஸ்கரமணியன், உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) நாகராஜன், உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) கீதாஞ்சலி மற்றும் எஸ்பிஐ, பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனம் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad